காளையார்கோவில் : காளையார்கோவில் சிலுக்கபட்டி பகுதியை சேர்ந்த சூரகுடி முடிதானை, எட்டியகுடி பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து வசதி செய்து தரப்படும், என சமரசக்கூட்டத்தில் அதிகாரிகள் உறுதியளித்ததால் நவ., 28 ல் நடத்தவிருந்த மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
காளையார்கோவில் வன்னிக்குடி பகுதியை சேர்ந்த சூரகுடி, முடிதானை, எட்டியகுடி ஆகிய கிராமங்களுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் போக்குவரத்து வசதி கோரி நவ., 28ல் மறியல் போராட்டம் நடத்த கிராம மக்கள், மார்க்சிஸ்ட் முடிவு செய்தனர்.
காளையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில்பேச்சுவார்த்தை நடந்தது.தாசில்தார் உமாமகேஸ்வரி, சிலுக்கபட்டி ஊராட்சித்தலைவர் திருமூர்த்தி, மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், இன்ஸ்பெக்டர், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் காளையார்கோவிலில் இருந்து சிறுவேலங்குடி, வெள்ளக்குடி, எட்டியகுடி,மடிச்சுகட்டி விலக்கு வரை காலை 10:55,மாலை 6:00 மணிக்கும் பஸ்கள் நிரந்தரமாக ஒரு மாதத்திற்குள் இயக்கப்படும்.
சிவகங்கை, சிலுக்கப்பட்டி வழியாக கலைக்குளம், ஆனந்துார் செல்லும் பஸ் இயக்கப்படும், என அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதன் பேரில் நவ.,28ல் நடக்கவிருந்த மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.