புதுச்சேரி-இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் வரும் 29ம் தேதி நடக்கும் விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க சமூக நலத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து சமூக நலத்துறை இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சமூக நலத் துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் வரும் 29ம் தேதி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
வெற்றிப் பெறுவோர்களுக்கு டிச.3ம் தேதி நடக்கும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
எனவே போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள் வரும் 29ம் தேதி காலை 7 மணிக்கு உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கிற்கு வந்து தங்களது பெயர்களை பதிவு செய்து, போட்டிகளில் பங்கேற்கலாம்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.