புதுச்சேரி-புதுச்சேரிக்கு சுற்றுப்பயணம் வந்த பா.ஜ., தேசிய பொது செயலாளர் அருண்சிங், மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்ற போது ராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதுச்சேரிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் வந்த பா.ஜ., தேசிய பொது செயலாளர் அருண்சிங், மணக்குள விநாயகர் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்றார்.
அப்போது, அவருக்கு ராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள், மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அவர், அரவிந்தர் ஆசிரமம் சென்று, அன்னையை வழிபட்டு தியானம் செய்தார்.
பின், ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பாரதியார் இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தி, தனது வருகையை அங்குள்ள பதிவேட்டில் பதிவு செய்தார்.
அமைச்சர் சாய் சரவணன்குமார், மாநில தலைவர் சாமிநாதன், துணை தலைவர் ரவிச்சந்திரன், பொது செயலாளர் மோகன்குமார், ராஜ்பவன் தொகுதி தலைவர் நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.