மானாமதுரை : வைகையில் இருந்து வீணாக கடலுக்குச் சென்ற நீரை மானாமதுரையில் 20 வருடங்களாக தண்ணீரே செல்லாத 20 கண்மாய்களுக்கு செல்ல நடவடிக்கை எடுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை கிராம மக்கள் பாராட்டினர்.
மானாமதுரையில் வைகையை ஒட்டியுள்ள மானாமதுரை,கால்பிரவு, கீழமேல்குடி,கிருங்காங்கோட்டை மற்றும் நாட்டார் கால்வாய் மூலம் பயன்பெறும் 16 கிராம கண்மாய்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக வைகை தண்ணீர் செல்லவில்லை.
கடந்த 3 மாதமாக வீணாக வைகை தண்ணீர் கடலில் கலந்து வந்ததையடுத்து மேற்கண்ட 20 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அன்னியேந்தல் அருகே மானாமதுரை ரீச் கால்வாயில் அடைக்கப்பட்டுள்ள பகுதியை பொதுப்பணித்துறையினர் சீரமைத்து மேற்கண்ட 20 கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தினர். 16 கிராம கண்மாய் விவசாயிகள் கால்வாயில் வந்த தண்ணீரை மலர் தூவி வரவேற்று நடவடிக்கை எடுத்த பொதுப்பணித்துறையினருக்கும், அமைச்சர் பெரியகருப்பன்,எம்.எல்.ஏ., தமிழரசி, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.