தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில் இந்து எழுச்சி முன்னணி நகரசெயலாளர் கோட்டைசாமி தலைமையில் வழங்கிய மனுவில், தேனியில் ரயில் வரும் நேரத்தில் பள்ளி நேரங்களிலும், வாரசந்தை நாட்களிலும் போக்குவரத்து நெரிசல் உள்ளது.
தற்போது வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தேனி வழியாக செல்கின்றனர். இதனால் அதிக போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க நகராட்சி திட்ட சாலை பணிகளை விரைவில் துவக்க வேண்டும்.
ஐயப்ப பக்தர்கள் இடையூறு இல்லாமல் செல்ல பைபாஸ் ரோடு பணிகளை விரைந்து முடிக்ககோரினர்.