தேனி: தேனி மதுரை ரோட்டில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் உழவர் பயிற்சி மையம் உள்ளது.
இங்கு நாட்டுக்கோழி வளர்ப்பு, கறவைமாட்டு பண்ணை துவக்குவதற்கான பயிற்சி துவங்க உள்ளது. 30 நாட்கள் பயிற்சிகள் அளித்து சான்றிதழ் வழங்கப்படும்.
சேர விரும்புவோர் விண்ணப்பத்தில் 2 பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் நகல், ஜாதி சான்றிதழ் நகலுடன் விண்ணக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நவ., 30க்குள் தொலை நிலை கல்வி இயக்குனரகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, சென்னை -- 35, என்ற முகவரிக்கு ரூ. 1000க்கான வங்கி டி.டி.,யுடன் இணைத்து, தலைவர், உழவர் பயிற்சி மையம், மதுரை ரோடு, தேனி 625 531 முகவரியில் நேரில் வழங்கி பயன் பெறலாம் என, பயிற்சி மைய தலைவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.