புதுச்சேரி-கனரா வித்யா ஜோதி திட்டத்தில் 117 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
கனரா வங்கியின் 117வது நிறுவனர் தினத்தை முன்னிட்டு, கடந்தாண்டு அதிக மதிப்பெண் பெற்ற 117 ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி கனரா வங்கி அலுவலத்தில் நடந்தது.
அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திரபிரியங்கா ஆகியோர் மாணவிகளுக்கான உதவித்தொகையை வழங்கி பேசினர். நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி இயக்குனர் ருத்ர கவுடு, கனரா வங்கியின் உதவிப் பொது மேலாளர் சபிதா எம் நாயக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் ஆறாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு தலா ரூ.2,500ம், எட்டாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு தலா ரூ.5,000 என மொத்தம் ரூ.5 லட்சம் உதவித் தொகையாக வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில் புதுச்சேரி மாவட்டதில் 75 மாணவிகளும், காரைக்காலில் 42 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.