பெரியகுளம் : கும்பக்கரை அருவியில் 20 நாட்களுக்குப் பிறகு நேற்று முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ., தூரம் தொலைவில் உள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழை, அருவி பகுதியில் பெய்த மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வதால் சின்ன குற்றாலம் என அழைக்கப்படுகிறது. நவ. 3 ல் கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இரு தினங்களாக தண்ணீர் வரத்து சீரானதால் 20 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் குளிக்க வனத்துறை அனுமதி அளித்தது. அருவியில் ஜில்லென்ற குளிர்ந்த தண்ணீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.