புதுச்சேரி-கல்மண்டபம் அரசு உயர்நிலைப் பள்ளியில் காரைக்கால் வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் மரம் நடுவதன் முக்கியத்தும் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
காரைக்கால் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு பயிலும் 14 மாணவர்கள், பேராசிரியர் அனந்தகுமார் தலைமையில் 'கிராமிய விவசாய வேளாண் தொழில் அனுபவ பயிற்சியை நெட்டப்பாக்கம் பகுதியில் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, உலக முந்திரி தினத்தையொட்டி, கல்மண்டபம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மரம் நடுவதின் முக்கியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில், மாணவர்கள் தரூண், ஜெயபாரதி, ஜெயசூரியா, கிரிதிக், ரவீனா, ரமா, வித்யா, பிரித்தீவி, சோப்ரா, சுபாஷ் சந்திரபோஸ், செல்வகுமரன், மோகன கிருஷ்ணன், பரத், ஹேமச்சந்திரன், சினேகா ஆகியோர் மரக்கன்றுகளை நடும் முறை, நீர் மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு, துாய்மையின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் கவுரி, உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன் தலைமையில் பள்ளி வளாகத்தில் பலவகையான மரக்கன்றுகள் நடப்பட்டன.
மேலும், பள்ளி வளாகத்தில் இருந்த குப்பைகளை அகற்றியதுடன், மழைக்காலங்களில் பரவும் நோய் குறித்தும், அதனிடம் இருந்து பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதில், வெற்றி பெற்றவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.