தேன : தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட மதுரை ரோடு,கம்பம் ரோடு, எடமால்தெரு, காளியம்மன் கோவில்தெரு, பெரியகுளம் ரோடு, கடற்கரை நாடார் தெரு, பகவதியம்மன் கோவில் தெருக்களில் உள்ள கடைகளில் நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் சுல்தான் சையது இப்ராகிம்,சரவணன், கோபாலகிருஷ்ணன், சக்திவேல் ஆகியோர் திடீர் சோதனை செய்தனர்.
இரண்டு நாட்களில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பாலிதீன் பைகள் 267 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. கடைகாரர்களுக்கு ரூ.9,300 அபராதம் விதிக்கப்பட்டது. கடைகளில் பாலீதீன் பைகள் மீண்டும் விற்பனை மற்றும் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.