புதுச்சேரி-புதுச்சேரி ஜீவானந்தபுரத்தில் உள்ள தேசிய ஆவண காப்பகத்தில் ஆவண பராமரிப்பு குறித்த பயிலரங்கம் நேற்று துவங்கியது.
நாளை 25ம் தேதி வரை நடக்கும் பயிலரங்கை கலெக்டர் வல்லவன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
பயிரலங்கில் நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு மற்றும் பொதுத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.ஆவண அதிகாரிகளின் கடமைகள், பராமரிப்பின் நுணுக்கங்கள், அதன் செயல்முறை குறித்து டில்லியில் உள்ள தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைமை அலுவலக அதிகாரிகள் உதயசங்கர், திங்கணம் சஞ்சீவ், ஸ்ரீவஷ்த்தா, முருகேசன் மற்றும் ராம்பாபு ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை புதுச்சேரி ஆவணக் காப்பக உதவி இயக்குனர் முருகேசன் செய்து வருகிறார்.