புதுச்சேரி-காலாப்பட்டு மத்திய சிறையில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
சிறைத்துறை ஐ.ஜி., ரவிதீப்சிங் சாகர், தலைமை கண்காணிப்பாளர் அசோகன் அறிவுறுத்தலின் பேரில், நடந்த முகாமிற்கு இலவச சட்ட உதவி மைய உறுப்பினர் செயலரான மாவட்ட நீதிபதி செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, டாக்டர் அரவிந்த் ஆகியோர், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள் குறித்து பேசினர்.
தொடர்ந்து, கைதிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் கைதிகள் சிலர் போதையால் ஏற்பட்ட விளைவுகளை எடுத்துரைத்தனர்.
ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் பாஸ்கரன், சிறைத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.