புதுச்சேரி-குடும்ப தகராறில் இளம் பெண் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முத்தியால்பேட்டை, வாழைக்குளம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கணேஷ்,28; ஓட்டலில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு அஞ்சலி,25; என்ற மனைவியும், இரண்டு மகன்கள் உள்ளனர்.கணேஷ் கடந்த 21ம் தேதி குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அதில், தம்பதியருக்குள் தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் காலை கணேஷ் வேலைக்கு சென்றுவிட்டார். மாலை வீட்டிற்கு வந்தபோது, அஞ்சலி வீட்டு சமையல் அறையில் துாக்கில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.