தேனி : ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், விடுமுறை தின ஆய்வுகள், காணொளி ஆய்வுகளை முழுமையாக கைவிடுதல், ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சிறு விடுப்பு எடுத்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் எட்டு ஒன்றியங்களில் பணியாற்றும் பி.டி.ஓ.,க்கள் முதல் உதவியாளர்கள் வரை 309 பேர் நேற்று பணிக்கு செல்ல வில்லை. இதனால் பல அலுவலர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடியது.
இன்றும் விடுப்பு போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் மாவட்ட தலைவர் ஜெகதீசன், செயலாளர் தாமோதரம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் டிச.14 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.