திண்டுக்கல் : மாவட்டத்தில் திருக்குறள் கருத்துக்களை மாணவர்கள் அறிந்து நல்லொழுக்கம் மேம்பட 2022---23ம் கல்வியாண்டில் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு போட்டிக்கு 1,330 குறட்பாக்களை ஒப்புவிக்கும் திறன்பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திருக்குறளில் இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள்,அடைமொழி, சிறப்புகள், சிறப்பு பெயர்கள், உரை எழுதியோர் அறிந்திருத்தல் கூடுதல் தகுதியாகும். முற்றோதலில் பங்கேற்கும் மாணவர்கள் திறனறி குழுவின் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு அக்குழுவின் பரிந்துரையில் பரிசுக்குரியோர் பட்டியல் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநருக்கு பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே பரிசு பெற்றவர்கள் கலந்து கொள்ள இயலாது. விருப்பமுள்ளவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலும், https://tamilvalarchithurai.tn.gov.in இணையத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.
விண்ணப்பங்களை தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல் என்ற முகவரிக்கு டிச.17க்குள் அனுப்ப வேண்டும். விபரங்களுக்கு 0451-2 461 585 ல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.