திருப்புத்துார் : திருப்புத்துார் பகுதி ரயில் பயணிகள் காரைக்குடி, தேவகோட்டை ரஸ்தா, திருச்சி,மதுரை என நீண்ட தூரம் சென்று ரயில் ஏறுகின்றனர். அதற்கு பதிலாக 17 கி.மீ. தொலைவிலுள்ள கல்லல் ரயில் நிலையத்தை பயன்படுத்த விரைவு சாலை வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது கண்டரமாணிக்கம், பொன்னாங்குடி, கள்ளிப்பட்டு, புரண்டி வழியாக 17 கி.மீ.துாரத்தில் கல்லலுக்கு செல்ல ரோடு உள்ளது. இருப்பினும் குறுகிய ரோடாகவும், பொன்னாங்குடி பகுதியில் பராமரிப்பின்றியும் உள்ளது. தற்போது திருப்புத்தூர் கண்டரமாணிக்கம் இருவழிச் சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
அது போல கண்டரமாணிக்கம்- கல்லலுக்கும் விரைவாக செல்ல சாலையை விரிவுபடுத்தி மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் திருப்புத்தூர் பயணிகள் விரைவாக கல்லல் செல்ல முடியும்.
மேலும் கல்லல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் ரயில்கள் கூடுதல் நேரம் நிற்கவும், நிற்காத ரயில்களை நிற்கவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுத்தால் திருப்புத்தூர் ரயில் பயணிகளுக்கு எளிதாக ரயில்பயணம் செய்யும் வாய்ப்பு உருவாகும்.