அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே வெள்ளையம்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சக்திவேல், வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா, ஒன்றிய குழுத்தலைவர் பஞ்சு முன்னிலை வகித்தனர். அமைச்சர் மூர்த்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பயனாளிகள் 1219 பேருக்கு ரூ.7 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 274 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக முடுவார்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம், பள்ளியில் சமையலறை கட்டடத்தை திறந்து வைத்தார். ஒன்றிய செயலாளர் தனராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மாணவரணி அமைப்பாளர்கள் பிரதாப், சந்தனகருப்பு பங்கேற்றனர்