மாவட்டம் விவசாய சார்ந்த பகுதியாகும். ஒவ்வொரு கிராம பகுதிகளையும் இணைக்க துவக்கத்தில் பஸ் போக்குவரத்து வசதி இருந்தது. இடையே கொரோனாவால் பஸ்கள் இயக்கப்படாத நிலை ஏற்பட்டது.
இயல்புநிலை திரும்பிய நிலையில் டீசல் விலை உயர்வு, வாகன பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் பொது போக்குவரத்திற்கு போதுமான வருவாய் இல்லாத நிலை ஏற்பட்டது.
மாவட்டத்தில் பல்வேறு கிராம பகுதிகளுக்கு சென்ற தனியார் பஸ்கள் திடீரென டிரிப்பை நிறுத்தியது.
இதனால் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கிராம பகுதிகளை இணைக்கும் பஸ் வசதி இல்லாததால் தனியார் வாகனங்களை அமர்த்தி குறிப்பிட்ட கிராம பகுதிகளை சென்றடைய பெரும் பொருட் செலவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் வட்டார போக்குவரத்து துறையினர் ஆய்வு செய்து தனியார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயக்காதபட்சத்தில் அவ்வழித்தடங்களில் அரசு பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.