தேவகோட்டை : தேவகோட்டை தாலுகா மார்க்சிஸ்ட் சார்பில் தலைமை அரசு மருத்துவமனை முன்பு தாலுகா செயலாளர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில குழு உறுப்பினர்ஸ்ரீதர், மாவட்ட குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, நிர்வாகிகள் தண்டியப்பன், சுரேஷ், அஜீஸ்கான் உட்பட பலர் பங்கேற்றனர்.
தாலுகா மருத்துவமனையில் சிடி சிகேன், விபத்துக்கள் பிரிவு துவக்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிப்பதில் ஏழைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.