ராமநாதபுரம் : ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் சார்பில்தனியார் மண்டபத்தில் நடந்த கம்பன் விழாவில்கருத்தரங்கம் நடந்தது.
சங்கத் தலைவர் அப்துல் சலாம் தலைமை வகித்தார். மகளிர் அணி தலைவி டாக்டர் மதுரம் முன்னிலை வகித்தார். 'கம்பனும் இலக்கியமும்,' 'கம்பனும் பாரதியும்,' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. சுழலும் சொல்லரங்கில் நடுவர் வாசு, பேச்சாளர்கள் அப்துல் மாலிக், கவிதா, தமிழரசி பங்கேற்றனர். சங்க துணைத்தலைவர்கள் கருணாநிதி, விவேகானந்தன், செயலாளர்டாக்டர் சந்திரசேகரன், பொருளாளர் மங்கள சுந்தரமூர்த்தி, பேராசிரியர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.