திருமங்கலம் : திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவ கல்லுாரி அமைந்த இடத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வகுப்பு பாதிக்கப்படும். மாணவர் தங்கும் விடுதி இடியும் நிலையில் உள்ளது.
மாணவிகள் விடுதியும் பத்தாண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்த இயலாத நிலையில் இருப்பதால் மாணவிகள், வாடகை வீடுகளில் தங்கி படிக்கின்றனர். இந்நிலையில் இந்தாண்டு தண்ணீர் தேங்கினால் மாணவர்களை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
அங்கு ஆய்வகம் உட்பட போதுமான வசதி கிடையாது என்பதால், மாணவர்கள் மூன்று நாட்களுக்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஓமியோபதி இணை இயக்குனர், ''ஒரு வாரத்திற்குள் மருத்துவக் கல்லுாரிக்கு புதிய இடம் தேர்வு செய்யப்படும்'' என உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.