டிஜிட்டலுக்கு மாறும் காந்திய இலக்கியங்கள் | மதுரை செய்திகள் | Dinamalar
டிஜிட்டலுக்கு மாறும் காந்திய இலக்கியங்கள்
Added : நவ 24, 2022 | |
Advertisement
 


மதுரை : அகமதாபாத் சபர்மதி ஆசிரமம் 'காந்தி ஹெரிடேஜ் போர்ட்டல்' நுாலகம் சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள காந்திய இலக்கியங்கள் டிஜிட்டலுக்கு மாற்றப்பட உள்ளன.

டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் கீழ் உலகெங்கும் உள்ள காந்திய புத்தகங்கள் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரை வந்த ஹெரிடேஜ் நுாலகர் ஹஷ்முக் எம்.பிரஜாபதி, கண்காணிப்பாளர் சுரேஷ் பிள்ளை காந்திய புத்தகங்களை ஆய்வு செய்தனர். மியூசிய செயலாளர் நந்தாராவ் , காப்பாட்சியர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், நுாலகர் ரவிச்சந்திரனுடன் கலந்துரையாடினர்.

நந்தாராவ் கூறுகையில்,''உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், வாசிப்பாளர்கள், மாணவர்கள் பயன்படும் வகையில் அனைத்து மொழிகளிலும் காந்திய இலக்கியங்கள் கிடைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது'' என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X