வாலிநோக்கம் : வாலிநோக்கம் அருகே மேலக்கிடாரம் ஊராட்சி சமுதாய கூடத்தில் கடலாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர் கவிதா தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் நந்தினி முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மயிலம்மாள் வரவேற்றார். 50 கர்ப்பிணிகளுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டது. ஐந்து வகை கலவை சாதம் வழங்கப்பட்டது. கர்ப்ப கால பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.