வாகனம்-டூவீலர் மோதல் வாலிபர்கள் இருவர் பலி
Added : நவ 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



திருப்புத்துார் : திருப்புத்துார் புதுக்கோட்டை ரோட்டில் நெடுமரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் டூவீலரில் வந்த 2 வாலிபர்கள் இறந்தனர்.

நேற்று முன்தினம் இரவு திருப்புத்தூர் - புதுக்கோட்டை ரோட்டில் நெடுமரம் பாலத்தை அடுத்து அடையாளம் தெரியாத வாகனம் டூவீலர் மீது மோதியதில் ஒருவர் இறந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

விசாரணையில், இறந்தவர் திருப்புத்தூர் அருகே தென்கரை டாஸ்மாக் பாரில் வேலை பார்க்கும் சிவகங்கை படமாத்துர் அருகே செம்பூரைச் சேர்ந்த சிவபெருமாள் மகன் சரவணன் 21 என்பதும், காயமடைந்தவர் அவரது நண்பரான சிராவயலைச் சேர்ந்த பரமசிவம் மகன் கோகுல்நாத் 21, என்பதும் தெரிந்தது.

கோகுல்நாத் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இறந்தார். இருவரும் இரவு 9:30 மணி அளவில்ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் கீழச்சிவல்பட்டி சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில் விபத்து நடந்துள்ளது. திருப்புத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X