மதுரை : மதுரை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து, டேபிள்டென்னிஸ் போட்டி கே.வி.டி., மெட்ரிக் பள்ளியில் நடந்தது. தாளாளர் சத்தியமூர்த்தி, முதல்வர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செங்கதிர் துவக்கி வைத்தார். அனைத்து வயது பிரிவு கூடைப்பந்து போட்டிகளில் பிரிட்டோ பள்ளியும், டேபிள்டென்னிஸ் போட்டிகளில் கே.வி.டி., பள்ளியும் வெற்றி பெற்றன. சர்வதேச மாற்றுத்திறனாளி இறகுபந்து வீரர் பத்ரிநாராயணன் பரிசு வழங்கினார்.