பாலமேடு : அலங்காநல்லுார் ஒன்றியம் கோடாங்கிபட்டியில் இடியும் நிலையில் உள்ள சமுதாயக்கூடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது.
இக்கிராமத்தில் பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. ஓராண்டாக அருகே உள்ள சமுதாய கூடத்தில் ஒருபுறம் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் உள்ளனர். இக்கட்டடம் பராமரிப்பின்றி மழைக்கு ஒழுகுவதும், மேற்பூச்சுக்கள் உதிர்வதுமாக உள்ளது.
மாடி படிக்கட்டுகள் பெயர்ந்து விழுந்துள்ளது. கழிப்பறை வசதி இல்லாமல் குழந்தைகள் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். இப்பகுதி விசேஷ நாட்களில் மையத்திற்கு விடுமுறை விடப்படுகிறது. குழந்தைகள் நலன் கருதி புதிய அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.