உச்சிபுளி : உச்சிபுளி அருகே காரா குரூப் வி.ஏ.ஓ.,ஜெயமதி அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போதுதலைதோப்பு ரோட்டில் இரு டிராக்டர்களில் மணல் அள்ளி வந்தனர்.உச்சிபுளி போலீசார் வாகனத்தை நிறுத்திய போது டிரைவர்கள் தப்பி ஓடினர். 2டிராக்டர்களை பறிமுதல் செய்து காரான் பகுதியை சேர்ந்த பாலகங்காதரன் 50, முனியசாமி 55,ஆகியோர் மீது வழக்கு பதிந்துவிசாரிக்கின்றனர்.