பழநி பழநி மலை முருகன் கோயில் நிலம் குத்தகை ஏலம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயில் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஆலமரத்துக்களம் பகுதியை சேர்ந்த செந்தில் 56, மகன் லிங்கேஸ்வரன் 28, உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
பழநி மலை முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சில ஆயிரம் ஏக்கர்கள் குத்தகை அடிப்படையில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
கோயில் நிர்வாகம் குத்தகை நிலங்களுக்கான புதிய குத்தகை ஏல அறிவிப்பை வெளியிட்டது. தற்போது பயிர் செய்யும் விவசாயிகள் புதிய குத்தகை ஏலத்தை கைவிட்டு ஏற்கனவே சாகுபடி செய்து வரும் விவசாயிகளே தொடர்ந்து பயிர் செய்ய அனுமதிக்க வலியுறுத்தி கோயில் நிர்வாக அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பழநி ஆலமரத்துக்களம் பகுதியை சேர்ந்த செந்தில் , அவரது மகன் லிங்கேஸ்வரன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து அவர்களது உடலில் தண்ணீர் ஊற்றப்பட்டது.
டி.எஸ்.பி., சிவசக்தி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து செல்லாததால் 23 பேர் கைது செய்யப்பட்டனர்.