தி.மு.க., கவுன்சிலர்களுக்கு கடிவாளம்; அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்குவதால் கண்டிப்பு
Added : நவ 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News


மதுரை : 'மதுரை மாநகராட்சி பணிகள், குறைகள் தொடர்பாக அலைபேசியில் தேவையின்றி பேச வேண்டாம்; யாராவது ரிக்கார்டு செய்து கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த பலர் தயாராக இருக்கின்றனர்' என மதுரையில் நடந்த நகர் தி.மு.க., செயற்குழுக் கூட்டத்தில் கவுன்சிலர்களை மூத்த நிர்வாகிகள் எச்சரித்தனர்.


மாநகராட்சி41வது வார்டு பகலவன் பூக்கார தெருவில்ஒருவர்பிரதமர் திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளார்.பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு பெறும் பணி துவங்கினார்.

அவரை தொடர்பு கொண்ட 42வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் செல்வியின் கணவர் கார்மேகம்,'என்னை கேட்காமல் மோடி திட்டத்தில் வீடு கட்டக்கூடாது.
நான் தான் கவுன்சிலர்' என மிரட்டும் தொனியில் பேச, பதிலுக்கு அந்த நபர் பேச, 'உன் வாயை உடைப்பேன்' எனகார்மேகம் மிரட்டல் விடுத்து சர்ச்சையில் சிக்கினார். அதேபோல் தெப்பக்குளம் பகுதியில் வார்டு 41வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் செந்தாமரை கண்ணனும் மிரட்டல் விடுத்த வீடியோ சர்ச்சையானது.

இந்நிலையில் நகர் செயற்குழுக்கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பேசியதாவது:
வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., அ.தி.மு.க., கட்சிகளுடன் சில பத்திரிகைகளும் நமக்கு எதிராக இருக்கும்.

அலைபேசியில் தி.மு.க., கவுன்சிலர்கள் பார்த்து பேச வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதை செய்தியாக வெளியிட்டு கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த தயாராக உள்ளனர். 42வது வார்டு கவுன்சிலர் கணவர் பேசிய ஆடியோ வெளியானது போன்ற
நிகழ்வு இனி நடக்கக்கூடாது, என்றனர்.

இக்கூட்டம் அவைத் தலைவர் ஒச்சுபாலு தலைமையில் நடந்தது.
செயலாளர் தளபதி கூட்டம் நோக்கம் குறித்து பேசினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம், முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாவட்ட துணை செயலாளர் மூவேந்திரன் நன்றி கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Alagu Muthusamy - BANGALORE,இந்தியா
24-நவ-202221:25:54 IST Report Abuse
Alagu Muthusamy மிரட்டக் கூடாது என்று எச்சரிக்கையா அல்லது போனில் (மட்டும்) அப்படி பேசவேண்டாம் என்று ஆலோசனையா. புரியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X