பாலசமுத்திரம : பழநி பாலசமுத்திரம் பேரூராட்சியின் குடிநீர் அபிவிருத்தி திட்டம் ரூ.9.62 கோடியில் நிறைவேற்றப்பட்டு தமிழக முதல்வரால் துவங்கி வைக்கப்பட்டது.
பழநி பாலசமுத்திரம் பேரூராட்சி பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீர் தடையின்றி வழங்க குடிநீர் அபிவிருத்தி திட்டம் ரூ.9.62 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் பாலாறு பொருந்தலாறு பகுதியில் நீர்மூழ்கி இரைப்பான்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்படுகிறது.
4 லட்சம் லிட்டர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு நீர் சுத்திகரிப்பு நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உள்ள நான்கு மேல்மட்ட தொட்டிகளுடன், புதிதாக மேல்பட்ட தொட்டிகள் அமைக்கப்பட்டு பாலசமுத்திரம், குரும்பபட்டி பகுதி முழுவதும் குடிநீர் வினியோகம் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பாலசமுத்திரம் சுத்திகரிப்பு நிலையத்தை எம்.எல்.ஏ., செந்தில்குமார், எம்.பி., வேலுச்சாமி திறந்து வைத்தனர்.
இதோடு பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
இதற்கு பேரூராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி ,பழநி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன் கலந்து கொண்டனர்.