திண்டுக்கல் : திண்டுக்கல் நத்தம் ரோடு, வாழைக்காய்பட்டி பிரிவு, முத்தமிழ் நகர்,கண்ணார்பட்டி, கல்நுாத்தாம்பட்டி, சூசையாபுரம் உள்ளிட்ட பகுதி ரோடுகளை சீரமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் நத்தம் ரோடு வாழைக்காய் பட்டியில் மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அடியனுாத்து ஊராட்சி தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார்.
மாநில செயற்குழுஉறுப்பினர் பாலபாரதி,மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் பேசினர்.
மாவட்ட குழு அஜாய் கோஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வநாயகம், ஜீவாநந்தினி,பிருந்தா பரசுராமன், ஒன்றிய செயலாளர் சரத்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் ஆசைத்தம்பி, மாமன்ற உறுப்பினர்ஜோதிபாசு, விவசாய தொழிலாளர் நலச் சங்க ஒன்றிய செயலாளர் அம்மையப்பன் பங்கேற்றனர்.