சேலம்: தமிழகத்தில், 2, 3, 4ம் ஆண்டு படிக்கும் கல்லுாரி மாணவியர், 1.13 லட்சம் பேர், புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும், 1,000 ரூபாய் பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது, முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவியர், https://pudhumaipenn.tn.gov.in என்ற வளைதளத்தில் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம், நவ., 30 வரை பதிவு செய்யலாம்.
நேரடியாக விண்ணப்பிக்க கூடாது. அரசு பள்ளியில் படித்த மாணவியர் மட்டும், இத்திட்டத்துக்கு தகுதி பெற்றவர். மாணவியர், ஆதார் அட்டை, மாற்றுச்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். 2, 3, 4ம் ஆண்டு படிக்கும் மாணவியர், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தவறியிருந்தால் தற்போது விண்ணப்பிக்கலாம். சந்தேகம் இருப்பின், 91500 - 56809; 56805, 56801, 56810 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
mraheas@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சலும் அனுப்பலாம். மேற்படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் முதலாண்டு படிக்கும் அனைவரும், கடைசி தேதிக்கு முன் விண்ணப்பித்து பயன்பெற, சேலம் கலெக்டர் கார்மேகம் கேட்டுக்கொண்டுள்ளார்.