சேலம்: சேலம் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் சிறார் கல்வி மேம்பாடு நிதியுதவியாக, முன்னாள் படை வீரர்களின் குழந்தைகளுக்கு, ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை படிப்போருக்கு, 2,000 ரூபாய்; 6 முதல், 8ம் வகுப்பு வரை படிப்போருக்கு, 4,000 ரூபாய்; 9, 10ம் வகுப்பினருக்கு, 5,000 ரூபாய்; பிளஸ், 1, பிளஸ் 2 வகுப்பினருக்கு, 6,000 ரூபாய் கல்வி நிதியுதவி வழங்கப்படுகிறது. நடப்பு 2022 - 23ம் கல்வியாண்டுக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம். தகவலுக்கு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை, 0427 - 2902903 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.