சேலம்: சேலம், பூலாவரியில், தி.மு.க., அலுவலகத்தில், தமிழக முன்னாள் அமைச்சர் ஆறுமுகத்தின், 10ம் ஆண்டு நினைவு தின ஊர்வலம் நேற்று நடந்தது. கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமை வகித்தார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு, எம்.பி., பார்த்திபன், வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., ராஜேந்திரன், வி.எஸ்.ஏ., கல்வி நிறுவன தலைவர் மலர்விழி, ராஜகணபதி மெடிக்கல்ஸ் பாண்டிதுரை, வீரபாண்டி ஒன்றிய செயலர் வெண்ணிலா சேகர் உள்ளிட்ட தி.மு.க.,வினர், அமைதி ஊர்வலமாக சென்று, ஆறுமுகம் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து மூத்த நிர்வாகிகள், 150 பேருக்கு, பொற்கிழி, பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பின், பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள், அஞ்சலி செலுத்தினர். அதேபோல், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மாவட்ட செயலர் செல்வகணபதி, இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே ஆறுமுகம் படத்துக்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினார். நகராட்சி தலைவர் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். மேலும் இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர் சட்டசபை தொகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தினர்.