சேலம்: சேலம், கோரிமேடு அரசு மகளிர் கல்லுாரி மாணவியர், கல்லுாரி செல்ல போதிய பஸ் வசதி இல்லை என, கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரிக்க, வணிக பிரிவு மேலாளர் சிவமணிக்கு, சேலம் கோட்ட அரசு போக்குவரத்து மேலாண் இயக்குனர் பொன்முடி உத்தரவிட்டார். விசாரித்த அவர், பஸ்களில் மாணவியருக்கு ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, கூடுதல் பஸ்களை இயக்க பரிந்துரைத்தார்.
இதனால் நேற்று முதல் காலையில், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து மாணவியர் மட்டும் பயணிக்கும்படி, கூடுதலாக ஒரு பஸ் இயக்கப்படுகிறது. மாலையில் கல்லுாரி முடிந்து வீடு திரும்பும்போது, மாணவியர் வசதிக்கு தற்போது இயக்கத்தில் உள்ள பஸ்களுடன், கூடுதலாக, 4 பஸ்கள், நேற்று முதல் இயக்கப்படுகின்றன.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் குளிப்பதை பார்த்தவர் கைது
சேலம்: சேலம், வீராணம் அருகே ஆச்சாங்குட்டப்பட்டி அடுத்த கத்திரிப்பட்டியை சேர்ந்த, 32 வயது பெண், மனநலம் பாதிக்கப்பட்டதால், அவரது பெற்றோர் பராமரிக்கின்றனர். அந்த பெண் நேற்று முன்தினம், வீட்டின் முன்புறம் உள்ள குடிலில் குளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த செல்வம், 60, பார்த்துக்கொண்டிருந்தார். இதை, பெண்ணின் தாய் கண்டித்தார். அதற்கு செல்வம் மிரட்டல் விடுத்து தாக்க முயன்றார். இதுகுறித்து, பெண்ணின் தாய் புகார்படி, வீராணம் போலீசார் விசாரித்து, செல்வத்தை கைது செய்தனர்.