கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது: மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 2021 -- 22ம் ஆண்டில், 46 பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பஞ்சாயத்துகளில் சாகுபடி செய்யப்படாத, 15 ஏக்கர் வரை தரிசாக உள்ள தொகுப்பு நிலங்கள் அடையாளம் கண்டறியப்பட்டன.
கூட்டத்தில், வேளாண் இணை இயக்குனர் சிவசுப்ரமணியன், தோட்டக்கலை துணை இயக்குனர் மணிமேகலை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) உமாபதி, வேளாண்மை துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.