குளித்தலை: குளித்தலை, மணத்தட்டையில் உள்ள மணப்பாறை காவிரி கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தில், மணப்பாறை எம்.எல்.ஏ., அப்துல் சமது, அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மணப்பாறை நகராட்சி தலைவர் கீதா மைக்கேல்ராஜ், கவுன்சிலர்கள் ஃபைசல் அகமது, முருகன், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன், குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் ஜெகதீசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
குளங்களுக்கு நீர் நிரப்பும் திட்டம்
க.பரமத்தி அருகே, ஆத்துப்பாளையம் அணையில் இருந்து குளங்களுக்கு நீர் நிரப்பும் திட்டம் தொடர்பாக அணைப் பகுதியில், பொதுப்பணி துறை அதிகாரிகளுடன் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ ஆய்வு செய்தார். காவிரியில் இருந்து உபரி நீரை ஆத்துப்பாளையம் அணைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மொஞ்சனுார், கார்வழி, துக்காட்சி, தென்னிலை மற்றும் பரமத்தி பகுதி கிராமங்களில் உள்ள குளங்களுக்கு பம்பிங் மூலம் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பும் திட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல், தாதம்பாளையம் ஏரிக்கு அமராவதி, காவிரியில் இருந்து உபரி நீரை ஆண்டிசெட்டிபாளையம் வரை பம்பிங் மூலம் கொண்டு சென்று அங்கிருந்து நீர்வழிப் பாதை வழியாக தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.