2 ஜோடி மட்டுமே ‍தேர்வு: ஏழைகளுக்கு இலவச திருமண திட்டம் கண்துடைப்பா?
Added : நவ 24, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

குளித்தலை: குளித்தலையை அடுத்த, அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இலவச திருமண திட்டத்தில் 2 ஜோடி மட்டுமே பயனாளியாக தேர்வு செய்யப்பட உள்ளதால், ஏழை மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் அலுவலகத்தின் முன் பகுதியில் இந்து சமய அறநிலைய துறை சார்பில் இலவச திருமணம் திட்டம் தொடர்பான அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
அதில், 'தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டவாறு ஏழை, எளிய ஹிந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோவில் மூலம் 20 ஆயிரம் ரூபாய் செலவில் திருமணம் நடத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள், கோவில் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் படி, திருமாங்கல்யம் (2 கிராம் தங்கம்) 10 ஆயிரம் ரூபாய், மணமகன் ஆடைக்கு ஆயிரம் ரூபாய், மணமகள் ஆடைக்கு 2 ஆயிரம் ரூபாய், மணமக்கள் வீட்டார் 20 பேருக்கு விருந்து உணவுக்கு 2 ஆயிரம் ரூபாய், பூமாலை, புஷ்பம் ஆயிரம் ரூபாய், சீர் வரிசை பாத்திரங்கள் 3 ஆயிரம் ரூபாய், இதர செலவு ஆயிரம் ரூபாய் என மொத்தம் 20 ஆயிரம் ரூபாய் திட்ட மதிப்பீடு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதர விவரங்களை கோவில் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



காத்திருக்கும் ஏமாற்றம்



இந்த பதாகையை பார்த்து, தினமும் 10க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் திருமணம் திட்டத்துக்கு விண்ணப்பிக்க, கோவில் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், கோவில் முன்பு வைக்கப்பட்டுள்ள பதாகையில், திருமண நாள் எப்போது, எத்தனை ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்படும்? என்பன போன்ற தகவல்கள் குறிப்பிடப்படவில்லை.பதாகையை பார்க்கும் ஏழை மக்களுக்கு 2 ஜோடிக்கு மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படும் என்ற தகவல் தெரியாது. விண்ணப்பங்களை வாங்கி செல்வோரில் 2 ஜோடி போக, எஞ்சியவர்களுக்கு ஏமாற்றமே காத்திருக்கிறது. இது குறித்து அய்யர்மலை கோவில் செயல் அலுவலர் அனிதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:இலவச திருமண திட்டம் குறித்த முழு விவரத்தினை பொதுமக்களுக்கு தெரிவிக்க, பதாகை வைக்கப்பட்டுள்ளது. அய்யர்மலை கோவில் மூலம் இரண்டு ஜோடிகள் மட்டும் இலவச திருமண திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்வு செய்யப்படும் ஜோடிக்கு வரும் டிச., 4ம் தேதி, திருமணம் நடக்கவுள்ளது. பதாகையில் விடுபட்டுள்ள தவறுகள் சரி செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.



கூடுதல் பயனாளிகள்...



2 ஜோடிக்கு மட்டுமே திருமணம் என்பதால், இலவச திருமண திட்டத்தில் பயன்பெறுவோம் என்ற நம்பிக்கையில் விண்ணப்பங்களை அளிப்பவர்களுக்கு ஏமாற்றம்தான் காத்திருக்கிறது. குளித்தலை கடம்பர் கோவிலிலும் 2 ஜோடிக்கு மட்டுமே இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. ஏழை, எளிய மக்கள் ஏராளமானோர் இருக்கும் நிலையில், பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இத்திட்டமானது மக்களை ஏமாற்றும் கண் துடைப்பு செயலாகிவிடும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X