மோகனுார்: மாநில தடகள போட்டிக்கு சென்ற, மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியரை, எம்.எல்.ஏ., ராமலிங்கம் வாழ்த்தி வழியனுப்பினார்.
நாமக்கல் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகளில், மோகனுார் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். அவ்வாறு வெற்றி பெற்ற மாணவியர், திருவண்ணாமலையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். அவர்களை, நாமக்கல் எம்.எல்.ஏ., ராமலிங்கம் பாராட்டி, வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.
தொடர்ந்து, பள்ளியில் படிக்கும் மாணவியரிடம் குறைகளை கேட்டறிந்தார். அதேபோல், பள்ளிக்கு நிலம் வாங்குவது குறித்தும் ஆய்வு செய்தார். பள்ளி தலைமையாசிரியர் சுடரொளி, ஒருவந்துார் ஊராட்சி முன்னாள் தலைவர் கைலாசம், ஓய்வு பெற்ற ஆசிரியர் நவலடி, ராசிபாளையம் ஊராட்சி துணை தலைவர் குமரவேல், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.