நாமக்கல்: நாமக்கல் பி.ஜி.பி., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், அண்ணா பல்கலையின், 8வது மண்டல கல்லுாரிகளுக்கு இடையேயான பெண்களுக்கான கைப்பந்து போட்டி கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
பி.ஜி.பி., கல்வி குழுமங்களின் தலைவர் பழனி ஜி பெரியசாமி தலைமை வகித்தார். தாளாளர் கணபதி வரவேற்றார். முதன்மையர் டாக்டர் பெரியசாமி சிறப்புரையாற்றினார். பி.ஜி.பி., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் கவிதா, சிறப்பு விருந்தினர் பரமத்தி வேலுார் டி.எஸ்.பி., கலையரசன் ஆகியோர், கைப்பந்து போட்டியை துவக்கி வைத்தனர்.
அண்ணா பல்கலையின், 8வது மண்டலத்தை சேர்ந்த, 6 கல்லுாரிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில், சேலம் சோனா பொறியியல் கல்லுாரி அணி, முதலிடத்தையும், சேலம் ஏ.வி.எஸ்., பொறியியல் கல்லுாரி, இரண்டாம் இடத்தையும் பிடித்தன.
பி.ஜி.பி., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் மாணவர்கள், பங்கேற்று வீராங்கனைகளை உற்சாகப்படுத்தினர்.