ப.வேலுார்: ப.வேலுார் சட்டசபை தொகுதியில், பா.ஜ.,வின், 'சக்தி கேந்திரா நிர்வாகிகள்' கூட்டம், சவுத் இந்தியா ரெசிடென்சியில் நடந்தது.
இதில், பார்லிமென்ட் சக்திகேந்திரா பார்வையாளர் அண்ணாதுரை கலந்துகொண்டு ஆய்வு மேற்கொண்டார். இதில், சக்தி கேந்திரா பொறுப்பாளர்களிடம் இருக்கவேண்டிய புதிய வாக்காளர் பட்டியல், உறுப்பினர் பட்டியல், பரிவார இயக்க பட்டியல் பொறுப்பாளர்கள், தெரிந்திருக்க வேண்டிய பூத் வாரிய வாக்காளர் எண்ணிக்கை பூத்தில் உள்ள வீடுகள் எண்ணிக்கை, தெருக்கள் விபரம், சமுதாய விபரம் உள்ளிட்ட விபரங்களை சேகரிக்க வேண்டும்.
கொடிக்கம்பம் நடுதல், செய்தி பலகை வைத்தல், பெயர் பலகை வைத்தல் போன்ற பல நிகழ்வுகளை செய்ய வேண்டும் எனவும், பார்லிமென்ட் தேர்தலுக்கு கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் கூறினார். மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட பார்வையாளர் சிவகாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் காந்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சத்யபானு உட்பட பலர் பங்கேற்றனர்.