திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே வெங்கடாஜலப்புரம் மகேந்திரன் 30.
இவரது மனைவி பிரவீனா 25. நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
ஒன்றரை வயதில் பெண் குழந்தை அகிமா உள்ளது. மகேந்திரன் தன் தந்தையுடன் சேர்ந்து பால் வியாபாரம் செய்கிறார்.
நேற்று முன்தினம் மாலை அனைவரும் வெளியே சென்று இருந்த நேரம் பிரவீனா வீட்டில் சேலையில் குழந்தையை தூக்கிலிட்டு கொலை செய்து தாமும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்தனர்.