தூத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மணல் லாரி டூவீலர் மீது மோதியதில் இருவர் பலியாயினர்.
விளாத்திகுளம் அருகே நாகலாபுரம் புதுப்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணியன் 58. பெட்டிக்கடை நடத்தி வந்தார்.
நேற்று மாலை 5:00 மணியளவில் அங்குள்ள பள்ளியில் பயிலும் பேரனை அழைத்து வர டூவீலரில் சென்றார்.
அவருடன் அதே பகுதியை சேர்ந்த அருமைநாயகமும் 70, டூவீலரில் உடன் சென்றார். சாத்தூர் - நாகலாபுரம் சாலையில் சென்ற போது வேகமாக வந்த மணல் லாரி டூவீலர் மீது மோதியது.
இருவரும் சம்பவயிடத்தில் இறந்தனர். சங்கரலிங்கபுரம் போலீசார் மணல் லாரியை பறிமுதல் செய்தனர்.