திருநெல்வேலி:திருநெல்வேலியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மேல அம்பாசமுத்திரம் அரசு, 'டாஸ்மாக்' மதுக்கடையில் 'குவாட்டர்' பாட்டில் வாங்கினார். அதன் விலை, 160 ரூபாய். விற்பனையாளர், 190 ரூபாய் வாங்கினார்.
வேல்முருகன் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் டாஸ்மாக் மேற்பார்வையாளர், 10 ஆயிரம், வழக்கு செலவு, 1,000 ரூபாய் என, 11 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டனர்.