கோவை:கோவையில் வீட்டு மனை விற்பனை செய்வதாக கூறி, கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்த வழக்கில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
கோவை சிட்ரா பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் பிரபு, 38. அரசு பள்ளி ஆசிரியர். வீடு கட்ட திட்டமிட்ட அவர், ராமநாதபுரத்தில் கட்டுமான நிறுவனம் நடத்திய ஜெகநாதன், கலைவாணி ஆகியோரை அணுகினார். அவர்கள் காளப்பட்டி நேரு நகரில் இருந்த காலி மனையை காண்பித்தனர். அதை பார்த்த கார்த்திக், மனை வாங்கி வீடு கட்ட 30 லட்சம் ரூபாய் முன் பணம் கொடுத்தார். ஆனால், ஜெகநாதன், கலைவாணி இருவரும், பத்திரப் பதிவு செய்து தரவில்லை.
விசாரித்தபோது, வேறு ஒருவர் நிலத்தை காட்டி, கார்த்திக் பிரபுவை ஏமாற்றியது தெரியவந்தது. அவரது புகாரை விசாரித்த போலீசார், ஜெகநாதன், கலைவாணி இருவரையும் கைது செய்தனர்.இந்த மோசடியில் தொடர்புடைய பிரியா, 28, இளவரசன், 32, சரண்ராஜ், 30, ரித்திகா, 27, ஆகிய நால்வரையும் ராமநாதபுரம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஜெகநாதன் நிறுவனத்தில் இவர்கள் நால்வரும் வேலை பார்த்துள்ளனர். வாடிக்கையாளர்களை அழைத்துச் சென்று வீட்டு மனைகளை காட்டி பொய்யான வாக்குறுதி அளித்து ஏமாற்றும் வேலையை இவர்கள் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.