சென்னை,:சென்னை மெட்ரோ ரயில் பயணியருக்கு, மாதந்தோறும் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பரிசு கூப்பன் அல்லது பரிசு பொருள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், கடந்த மாதம் 21ம் தேதி முதல் கடந்த 21ம் தேதி வரையில், பயணம் செய்த பயணியருக்கு மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கல் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில், நேற்று நடந்தது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுரவேதி தலைமையில், பொதுமக்கள் மற்றும் பயணியர் முன்னிலையில் நடந்த அதிர்ஷ்டக் குலுக்கலில், 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.