திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பாக, 'சிறகுகள் - 200' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், அரசு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும், 200 பழங்குடியின மாணவ - மாணவியரின் தனித் திறமையை வெளிக்கொணர்ந்து, கல்வி மீது ஆர்வத்தை துாண்டும் வகையில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் படி, கடந்த ஆண்டு, 100 பேருக்கு 'டேப்' எனும் கையடக்க மடிக்கணினி வழங்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் மேலும் 100 மாணவ - மாணவியருக்கு, கையடக்க மடிக்கணினியை, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.
தொடர்ந்து, மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள போதை பழக்கத்தில் இருந்து விடுபடும் வகையில், கிரிக்கெட், கால்பந்து போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட, 90 குழுவினருக்கு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.