மதுரை -'மதுரையில் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் சம்பள பிரச்னைக்கு மாவட்ட கல்வி அலுவலர்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: மதுரை கல்வி மாவட்டத்தில் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,ல் இணையாமல் 'இ பே ரோல்' மூலம் சம்பளம் பெறும் பெரும்பாலான பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள பிரச்னை சரிசெய்யப்பட்டுவிட்டது.
மேலும் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,ல் சம்பளம் பெறும் உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு நாட்களில் சம்பளம் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுபோல் மேலுார் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளிலும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். தாமதம் ஏற்பட்டால் உண்ணாவிரதம் நடத்தப்படும், என்றார்.