மதுரை--மதுரை துணை மேயர் நாகராஜன் மாநகராட்சி ரோட்டை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக எழுந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி மண்டலம் 5க்கு உட்பட்ட வார்டு 80ல் எம்.ஜி.ஆர்., கிழக்கு தெருவில் மா.கம்யூ., கட்சியைச் சேர்ந்த துணை மேயர் நாகராஜன் வீடு உள்ளது. அங்கு20 அடி ரோட்டை ஆக்கிரமித்து வீடு கட்டியதால் 7 அடியாக சுருங்கியது.
துணை மேயர் என்ற அதிகாரத்தில் ரோட்டை ஆக்கிரமித்துள்ளார்என புது விளாங்குடி சிவாஜி, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறை மன்றத்தில் புகார் அளித்தார்.
மாநகராட்சி தேர்தலில்துணை மேயர் வேட்பாளராக நாகராஜன் அறிவிக்கப்பட்ட போதும் இதே பிரச்னை எழுந்தது. தற்போது டிச.1, 2022 தேதியிட்ட முறை மன்ற ஆணை வெளியானது.
நாகராஜன் கூறியதாவது: எம்.ஜி.ஆர்., கிழக்கு தெருவில் என் மனைவி செல்வராணி பெயரில் இடம் கிரையம் செய்துள்ளேன். நான் வீடு கட்டியுள்ள தெரு உருவான காலம் முதல் எங்களது 4 மனைகளின் முன் முட்டுச்சந்து தான் உள்ளது. மாநகராட்சி ஆவணங்களில் என் தெரு உட்பட பல தெருக்கள் வரைபடங்களில் இல்லை. உட்பிரிவு இல்லாத, மாநகராட்சி கமிஷ்னரின் பெயர் இடம் பெறாத முட்டு சந்தாகத்தான் உள்ளது. 2018ல் வீடு கட்டிய போது துணை மேயராக இல்லாத நேரத்தில் அதிகாரத்தை பயன்படுத்தியதாக எப்படி கூற முடியும்.
பதிவுத்துறை ஆவணம் குறிப்பிடும் நான்கு மால்கள்வைத்து சட்ட நடவடிக்கைஎடுக்க இயலாது. ஏனென்றால் பதிவுத்துறை ஆவணம் திருத்தத்திற்கு உட்பட்டது.
எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சிவாஜி என்பவர் பொய் புகார் தாக்கல் செய்துள்ளார். இது குறித்து அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன்,என்றார்.