விஷம் குடித்து பெண் தற்கொலை
அவரை உறவினர்கள் மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்நிலையில், வெள்ளையம்மாள், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இது குறித்து சின்னமுத்து அளித்த புகாரின்படி குளித்தலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
சேமங்கியில் கால்நடை மருத்துவ முகாம்
கரூர்: கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில், உதவி இயக்குனர் சரவணகுமார் தலைமையில், சிறப்பு மருத்துவ முகாம் சேமங்கியில் நடந்தது. அதில், கால்நடைகளுக்கு பசுந்தீவனம் அளிப்பதன் முக்கியத்துவம், மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களை தடுப்பது ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில், மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் முரளிதரன், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் டாக்டர் லில்லி அருள்குமாரி, கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் அருணாசலம் உள்பட பலர் பங்கேற்றனர். மருத்துவ முகாமில், 400க்கும் மேற்பட்ட பசு, எருமை மாடுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
விவசாயியை தாக்கிய தாய், மகன் மீது வழக்கு
குளித்தலை: குளித்தலையை அடுத்த, மத்தகிரி பஞ்., வடக்கு கல்லுப்பட்டியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம், 35, விவசாயி. இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ராசு என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே ஆடு மேய்ப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் ராஜமாணிக்கம், கடந்த 21ம் தேதி காலை 10:45 மணியளவில் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ராசு மகன் சக்திவேல், 35, தாய் செல்லம்மாள், 55, ஆகிய இருவரும் ராஜமாணிக்கத்திடம், ஏன் ஆடு மேய்க்க கூடாது என கேட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கினர்.
இதுகுறித்து ராஜமாணிக்கம், சிந்தாமணிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சக்திவேல், செல்லம்மாள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
4 பேர் உயிரிழந்த விவகாரம் வீட்டு உரிமையாளருக்கு ஜாமின்
கரூர்: கரூர் அருகே, விஷ வாயு தாக்கி, நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில், வீட்டின் உரிமையாளருக்கு, ஜாமின் வழங்கி, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூர் அருகே, கரட்டுப்பாளையம், காந்தி நகரில், குணசேகரன் என்பவர், புதிதாக வீடு கட்டி வருகிறார். இங்கு கடந்த, 15ம் தேதி, கழிவுநீர் தொட்டியில், விஷவாயு தாக்கி, கோபால், மோகன்ராஜ், ராஜேஷ்குமார், சிவக்குமார் ஆகிய நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து, வீட்டின் உரிமையாளரான குணசேகரனை, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், குணசேகரன் தரப்பில், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா, இரண்டரை லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், நான்கு லட்ச ரூபாயை, ஜாமின் வைப்பு தொகையாக நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும், கூறி குணசேகரனுக்கு, ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.